
2026 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் 30 ஆவது போட்டி இன்று (20) நடைபெறவுள்ளது.
குறித்த தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப் பரீட்சை நடத்துகின்றன.
இந்த போட்டி இன்று இரவு 7.30க்கு அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது.
இதுவரை நடைபெற்ற 5 போட்டிகளில் 3 போட்டியில் வெற்றி பெற்று குஜராத் டைட்டன்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் 6 ஆவது இடத்தில் உள்ளது.
இதுவரை நடைபெற்ற 5 போட்டிகளில் 1 போட்டியில் மாத்திரம் வெற்றி பெற்று மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 10ஆவது இடத்தில் உள்ளது.
இன்று நடைபெறவுள்ள போட்டி இரு அணிகளும் ஒரு சவாலான போட்டியாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





