உலகம்

போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஈரான் நிபந்தனை

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரே வழி, ஈரானின் சட்டபூர்வமான உரிமைகளை அங்கீகரிப்பகும்.

 

மேலும், இழப்பீடுகளை வழங்குவது மற்றும் எதிர்கால ஆக்கிரமிப்புக்கு எதிராக உறுதியான சர்வதேச உத்தரவாதங்கள் மட்டுமே போரை முடிவுக்கு கொண்டுவர ஒரே வழி என்று ஈரானின் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் தெரிவித்துள்ளார்.

 

அறிக்கை ஒன்றை வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

 

இஸ்ரேலிய இராணுவம் “பெய்ரூட்டின் தாஹிஹ் பகுதியில் ஹெஸ்பொல்லா உள்கட்டமைப்பு மீது பெரிய அளவிலான தாக்குதல் அலையை” தொடங்கியுள்ளது.

 

இதனிடையே, ஏவுகளை இடைமறிக்கும் முயற்சிகளும் நடந்து வரும் நிலையில், இராணுவ நடவடிக்கைகள் தீவிரமடைந்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

 

லெபனான் தலைநகரின் தெற்கு புறநகர்ப் பகுதிகளில் வசிப்பவர்கள் உடனடியாக வெளியேறுமாறு செய்தித் தொடர்பாளர் அவிச்சே அத்ரே வலியுறுத்தினார்.

 

இஸ்ரேலின் பல பகுதிகளில் ஹெஸ்பொல்லா ஏவுகணைகளை ஏவியுள்ளது.

 

அதே நேரத்தில் ஈரானும் ஹெஸ்பொல்லாவும் வடக்கு இஸ்ரேலை குறிவைத்து “வீடுகள், வீதிகள், பாடசாலைகள் மீது தினமும் ஏவுகணைகள் மழை பொழிகின்றன” என்று இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

ஈரானிய வெளியுறவு மந்திரி சையத் அப்பாஸ் அரக்சி, நாட்டின் “தேசிய உள்கட்டமைப்பு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

 

ஈரானின் பழமையான வங்கியின் ஒரு கிளை “ஊழியர்களால் நிரம்பியிருந்தபோது” குண்டுவீசப்பட்டதாகவும், இந்த சம்பவத்திற்கு பழிவாங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

 

எதிர்கால ஆக்கிரமிப்பைத் தடுக்க உறுதியான சர்வதேச உத்தரவாதங்கள் அவசியம் என்று ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் மீண்டும் வலியுறுத்தினார்.

 

எந்தவொரு விரோதத்தையும் நிறுத்துவதற்கு நிபந்தனைகளை பேச்சுவார்த்தைக்கு உட்படுத்த முடியாத முன்நிபந்தனைகளாக வடிவமைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button