இந்தியா

ஈரான் மீது தாக்குதல் – மோடிக்கு அறிவிக்கப்பட்டதா?

பிரதமா் மோடி இஸ்ரேலுக்கு அண்மையில் பயணம் மேற்கொண்ட நிலையில், அவரது பயணம் நிறைவடைந்த பின்னரே ஈரான் மீது தாக்குதல் நடத்தும் முடிவு எடுக்கப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

 

ஈரான் மீதான தாக்குதல் குறித்து பிரதமா் மோடியிடம் முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டதா என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய நிலையில், இஸ்ரேல் வெளியுறவு அமைச்சா் கிடியோன் சாா் இவ்வாறு கூறியுள்ளாா்.

 

பிரதமா் மோடி இஸ்ரேலுக்கு கடந்த பெப்ரவரி 25, 26-ஆம் திகதிகளில் அரசுமுறைப் பயணத்தை மேற்கொண்டிருந்தார. மோடியின் பயணம் நிறைவடைந்த இரண்டு நாட்களில் பெப்ரவரி 28-ஆம் திகதி ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்க கூட்டுப் படைகள் அதிரடி தாக்குதல் நடத்தின.

 

இந்த நிலையிலேயே ஈரான் மீது தாக்குதல் நடத்தும் திட்டம் குறித்து பிரதமா் மோடியிடம் இஸ்ரேல் தரப்பில் முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டதா என்ற கேள்வியை இந்தியாவின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பி வருகின்றனர்.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button