இலங்கை

சுற்றுலா செல்வதற்கு இலங்கை அபாயமான நாடு அல்ல – அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் அந்நாட்டு பிரஜைகளுக்கு விளக்கம்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான அரசியல் மற்றும் பாதுகாப்பு சூழ்நிலைகளுக்கு மத்தியில், இலங்கையை சுற்றுலா செல்வதற்கு அதிக அபாயமுள்ள வலயாக அடையாளப்படுத்தி அவுஸ்திரேலிய ஊடக நிறுவனம் ஒன்று வெளியிட்ட செய்தியை, இலங்கையிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் உத்தியோகபூர்வமாக மறுத்துள்ளார்.

 

தொடர்புடைய ஊடக நிறுவனம் தனது செய்தியில் இஸ்ரேல், லெபனான், ஓமான் மற்றும் கட்டார் போன்ற நாடுகளுடன் இலங்கையையும் ஒரே நிறத்தில் வரைபடத்தில் அடையாளப்படுத்தி இந்த செய்தியை குறித்த ஊடகம் வெளியிட்டிருந்தது.

 

எவ்வாறாயினும், இந்த அறிக்கை தொடர்பாக விளக்கமளித்துள்ள கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மேத்யூ டக்வொர்த், ஆஸ்திரேலிய பிரஜைகள் இலங்கைக்கு விஜயம் செய்வதற்கு எவ்வித விசேட பாதுகாப்பு அச்சுறுத்தல்களும் இருப்பதாக இதுவரை அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை என வலியுறுத்தியுள்ளார்.

 

அத்துடன், அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்கள் ஊடாக இலங்கை தொடர்பாக இவ்வாறான அபாய எச்சரிக்கைகள் எதுவும் விடுக்கப்படவில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button