இந்தியாசுவிஸ்

சுவிஸ் அதிபர் கை பர்மேலினின் இந்திய அரசுமுறைப் பயணம்: டெல்லியில் உற்சாக வரவேற்பு

புதுடெல்லி:

சுவிற்சர்லாந்து நாட்டின் அதிபர் கை பர்மேலின் (Guy Parmelin) அரசுமுறைப் பயணமாக இந்தியா சென்றடைந்ததுள்ளார்.

அக்டோபர் 7-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த அரசுமுறைப் பயணத்திற்காக டெல்லி விமான நிலையம் வந்தடைந்த அவருக்கு இந்திய அரசு சார்பில் உற்சாக மற்றும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள சுவிஸ் அதிபர் கை பர்மேலின், “இந்தியாவிற்கான எனது அரசுமுறைப் பயணம் தொடங்குகிறது. டெல்லி விமான நிலையத்தை வந்தடைந்த எனக்கு அளிக்கப்பட்ட கௌரவமிக்க வரவேற்பிற்கு எனது நன்றிகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அவரது வருகையையொட்டி டெல்லி மாநகரின் முக்கிய வீதிகளில் வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த விஜயத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் பொருளாதாரக் கூட்டுறவு குறித்து முக்கிய பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளன.

Screenshot
Screenshot
Screenshot
Screenshot
மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button