
வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வது குறித்தும் கவனம் செலுத்திய ஜனாதிபதி, அதன்போது திட்டமிட்ட ரீதியில் எடுக்கப்படும் நடவடிக்கைகளின் அவசியத்தை சுட்டிக்காட்டியதுடன், தரவு மையங்கள் போன்ற புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் முதலீடுகளை ஊக்குவிப்பதற்காக சலுகைப் பொதியை (பெகேஜ்) தயாரிக்குமாறும், டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ஹான்ஸ் விஜயசூரியவின் தலைமையில் இந்த விடயங்களை ஆராயவும் நிதி அமைச்சிற்கு அறிவுறுத்தினார்.
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கே.ஏ. விமலேந்திரராஜா, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ஜி.எம்.ஆர்.ஜி. அபோன்சு, சுங்க பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட, இலங்கை துறைமுக அதிகாரசபையின் தலைவர் பராக்கிரம திசாநாயக்க ஆகியோருடன் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு, இலங்கை மத்திய வங்கி மற்றும் இலங்கை முதலீட்டு சபை போன்ற துறைசார் நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட அதிகாரிகள் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.





