
மத்திய கிழக்கில் நிலவும் நெருக்கடி நிலை காரணமாக ஆயிரக்கணக்கான வெளிநாட்டுப் பிரஜைகள் அந்தந்த நாடுகளில் சிக்கியுள்ளனர்.
அவுஸ்திரேலியா
இதன்படி மத்திய கிழக்கில் சிக்கியுள்ள சுமார் 115,000 அவுஸ்திரேலியர்களை மீட்பது குறித்து விமான நிறுவனங்களுடன் வெளிவிவகார அமைச்சர் பென்னி வொங் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும், வான்பரப்பு மூடப்பட்டுள்ளதால் மீட்புப் பணிகளில் சிக்கல் நிலவுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தற்போதைய சூழலால் சுமார் 4,00,000 பிரான்ஸ் பிரஜைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ்
இந்தநிலையில் பிரான்ஸின் வெளிவிவகார அமைச்சின் “Ariane” எனும் பதிவு முறையில் இதுவரை 25,000-க்கும் மேற்பட்டோர் இணைந்துள்ளதாக அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஜேர்மனி
பாதிக்கப்பட்ட சுமார் 30,000 ஜேர்மனியர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வரும் பொறுப்பு சுற்றுலாத் துறையினருக்கே உள்ளது என ஜேர்மன் அரசு கூறியுள்ளது.
இராணுவ ரீதியான மீட்புப் பணிகள் என்பது இறுதி முடிவாக மட்டுமே இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாலி
ஓமானில் சிக்கியிருந்த 127 இத்தாலிய பிரஜைகளை ஏற்றிய முதலாவது விசேட விமானம் திங்கட்கிழமை இரவு ரோம் நகரை சென்றடைந்துள்ளது.
இத்தாலிய தூதரகத்தின் உதவியுடன் இவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
ஸ்பெயின்
மத்திய கிழக்கில் உள்ள தனது பிரஜைகளை வெளியேற்றும் பணிகளை ஸ்பெயின் ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஜோஸ் மானுவல் அல்பாரஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.
அமெரிக்கா
மத்திய கிழக்கிலுள்ள ஒரு டஜனுக்கும் மேற்பட்ட நாடுகளில் இருக்கும் அமெரிக்க பிரஜைகளை உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.
இருப்பினும், மீட்பு விமானங்களுக்கான அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை.





