இலங்கை

இலங்கை – நியூசிலாந்து மோதல்: கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்

2026 T-20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று (25) நடைபெறவுள்ள இலங்கை – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியை முன்னிட்டு, கொழும்பு நகரை மையப்படுத்தி விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

 

அதன்படி, கொழும்பு போக்குவரத்து காவல்பிரிவினரால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள விசேட போக்குவரத்து திட்டத்தின் படி,பின்வரும் வீதிகளில் சந்தர்ப்பத்திற்கு ஏற்ப போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும்:

வின்சன் பெரேரா மாவத்தை (கிராண்ட்பாஸ் வீதி): பிரிட்டோ பாபாபுள்ளே பாலச் சந்திப்பிலிருந்து பாபாபுள்ளே நோக்கி நுழையும் பகுதி.

 

பாபாபுள்ளே பாலத்திற்கு அருகிலிருந்து விளையாட்டு மைதானத்தை நோக்கி நுழையும் பகுதி.

 

செபஸ்டியன் கால்வாய் வீதியின், மெல்வத்தை பாலத்திற்கு அருகில் இருந்து மைதானத்தை நோக்கி நுழையும் பகுதி.

100 அடி வீதி, விகாரை வீதி சந்திப்பிலிருந்து மைதானத்தை நோக்கி நுழையும் பகுதி.

 

மாளிகாவத்தை, விளையாட்டு மைதானத்திற்கு அருகிலுள்ள கிளை வீதியால் மைதானத்தை நோக்கி நுழையும் பகுதி.

 

சத்தர்ம மாவத்தை கெத்தாராம வீதி சந்திப்பிலிருந்து விகாரை வீதிக்குள் நுழையும் பகுதி

ஆகிய பகுதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

அத்தோடு, ஆர். பிரேமதாச மைதானத்தைச் சூழவுள்ள வாகன தரிப்பிடங்களுக்கு மேலதிகமாக,

 

கிராண்ட்பாஸ் மெட்டிபார்க் வாகன தரிப்பிடம்.

 

சதொச வாகன தரிப்பிடம்.

 

செபஸ்டியன் கால்வாய் வாகன தரிப்பிடம்.

 

கோவில் வீதி.

 

அப்பிள் வத்தை (Apple Watte).

 

100 அடி வீதியின் இருமருங்கிலும் வாகனங்களை நிறுத்த முடியும் என காவல்துறை அறிவித்துள்ளது.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button