
சமையல் எரிவாயு தட்டுப்பாட்டுக்குத் தீர்வு காணக் கோரி, எரிவாயு நிறுவனத்துக்கு முன்னால் இன்று போராட்டம் நடத்தவுள்ள அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத் தலைமையில் இந்தப் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு இல்லை என வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் வசந்த சமரசிங்க, தெரிவித்துள்ளார்.
லிற்றோ சமையல் எரிவாயு கொள்கலன்கள் விநியோகத்தில் எந்தக் குறைபாடும் இல்லை என்றும், சுமார் 80,000 கொள்கலன்கள் சந்தைக்கு விடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், எரிவாயு தேவையுடைய பெரும்பாலான பகுதிகளில் லிற்றோ நிறுவனமும, மீதமுள்ள பகுதிகளில் லாஃப் நிறுவனமும் பூர்த்தி செய்து வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, எரிவாயு கொள்கலன் ஏற்றப்பட்ட பாரவூர்திகள் நகரத்துக்கு வருவதைக் கண்டு, அப் பகுதி மக்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடுவதாக சில பிரதேச செய்திகள் தெரிவிக்கின்றன





