இலங்கை

இந்திய திட்டங்களில் ஏன் தாமதம்?” – அனுரவிடம் கேள்வி எழுப்பிய மோடி

புதுதில்லியில் நடைபெற்ற 2026 செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பக் கண்காட்சியின் ஒரு பகுதியாக, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுடன் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சந்திப்பின் போது, இலங்கையில் நடைபெற்று வரும் இந்தியத் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் தாமதங்கள் குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கோள்வி எழுப்பினார்.

 

இந்த தகவலை ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

 

பேச்சுவார்த்தைகளின் போது இந்தியா நிதியளிக்கும் திட்டங்கள் மற்றும் முதலீடுகள் குறித்து நரேந்திர மோடி விசாரித்ததாக வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்தை கோடிட்டு குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

பேச்சுவார்த்தைகளின் போது இந்தியா நிதியளிக்கும் திட்டங்கள் மற்றும் முதலீடுகள் குறித்து நரேந்திர மோடி விசாரித்ததாக வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்தை கோடிட்டு குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட அழிவைத் தொடர்ந்து கூடுதல் உதவி தேவையா என்பது தொடர்பாகவும், தற்போது நடைபெற்று வரும் திட்டங்களின் தற்போதைய நிலை குறித்தும் இந்தியப் பிரதமர் இதன்போது கேட்டறிந்துள்ளார்.

 

இதேவேளை இந்தியாவில் உள்ள அரசு நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான தொழில்நுட்பங்கள் குறித்த அறிவு பரிமாற்றம் குறித்தும் இந்த சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த விடயத்திலும் உதவுவதாக இந்தியா உறுதியளித்ததாகவும்; அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button