அரசியல்

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நாமலின் உரை இரத்து – விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களே காரணம் என விசனம்

தற்போதைய அரசாங்கத்தினதும் தமிழீழ விடுதலைப் புலிகளினதும் கொள்கைகள் ஒரே மாதிரியாகவே காணப்படுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

 

பிரித்தானியாவின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இந்த மாத இறுதியில் அவர் உரையாற்ற இருந்த நிலையில் விரிவுரை இரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

 

விடுதலைப் புலிகளின் பயங்கரவாதம் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்ட போதிலும், அவர்களது கொள்கைகள் இன்றும் பிரித்தானியா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் கனடா போன்ற நாடுகளில் புலம்பெயர் வலைப்பின்னல்கள் ஊடாகச் செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

பிரித்தானியா முழுவதும் உள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களின் எதிர்ப்பு தெரிவித்தமையே உரை இரத்து செய்யப்பட்டமைக்கான காரணம் என அவரது ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

பிரித்தானியாவிலுள்ள தமிழ் மாணவர் அமைப்புகள் மற்றும் தமிழ் இளைஞர் அமைப்பு உள்ளிட்ட புலம்பெயர் அமைப்புகள் அவரது வருகைக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டங்களை முன்னெடுத்தன.

 

இந்த அழுத்தங்களின் காரணமாகவே கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விரிவுரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button