அரசியல்இலங்கை

ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி பிக்குகள் பெரும் அட்டகாசம் ; அதிர்கிறது கொழும்பு

வண. கலகொட அத்தே ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி கொழும்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், பொலிஸாரின் கோரிக்கையைத் தொடர்ந்து ஜனாதிபதி செயலகத்திற்கு எதிர்ப்புறமாக வீதியின் மறுபக்கத்திற்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

கண்டியிலிருந்து கொழும்பு வரை பேரணியாக வந்த பௌத்த பிக்குகள் உள்ளிட்ட போராட்டக்காரர்கள், ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இருந்த பகுதியிலிருந்து வெளியேறி, காலி வீதியின் மறுபுற நடைபாதையில் தற்போது போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.

இதனால் போக்குவரத்துக்காக வீதி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் பங்கேற்போரின் எண்ணிக்கை குறைந்துள்ள போதிலும், ஒரு குழுவினர் தொடர்ந்து அங்கு தங்கியுள்ளனர்.

இதற்கு முன்னர், வீதியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கூடாரத்தை அகற்ற பொலிஸார் முயன்றபோது, பொலிஸாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட பிக்குகளுக்கும் இடையில் பதற்றம் ஏற்பட்டது.

முன்னாள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்களான பிரசன்ன ரணவீர, சஞ்சீவ எதிரிமான்ன, இந்திக அனுருத்த மற்றும் முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னபிரிய உள்ளிட்ட அரசியல்வாதிகளும் போராட்டத்தில் கலந்துகொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி போராட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய போதிலும், இணக்கப்பாடு எட்டப்படவில்லை. இதனால், குறைந்த எண்ணிக்கையிலான போராட்டக்காரர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button