
மத்திய வங்கியின் 75-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா மத்திய வங்கிக்கு நேற்று விஜயம் செய்தார்.
நாட்டின் பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க ஐ.எம்.எப் வழங்கிய கடன் வசதி மற்றும் கடன் மறுசீரமைப்பு உதவிகளுக்காக ஆளுநர் நந்தலால் வீரசிங்க நன்றியைத் தெரிவித்தார்.
தற்போதைய ஐ.எம்.எப் திட்டத்தின் கீழ் இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்தை ஒரு ‘வெற்றிக் கதை’ என ஜோர்ஜீவா பாராட்டியுள்ளார்.
பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதில் மத்திய வங்கியின் பங்களிப்பை அங்கீகரித்த அவர், கட்டமைப்பு சீர்திருத்தங்கள் மூலம் நாடு உயர் வளர்ச்சியை எட்டும் என நம்பிக்கை தெரிவித்தார்.





