இலங்கை

சட்டத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்த எந்த நாடும் அபிவிருத்தி அடைந்ததில்லை”

சட்டத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்த எந்த நாடும் அபிவிருத்தி அடைந்ததில்லை என்றும், சட்டத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்த நாட்டில் குற்றவாளிகள்தான் அதிகாரத்தை கைகளில் வைத்துள்ளனர் என்றும் வலியுறுத்திய ஜனாதிபதி, சட்டத்தின் ஆட்சி நிலைநிறுத்தப்பட்ட ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு தற்போதைய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும், 2026 ஆம் ஆண்டு என்பது சட்டத்தின் முன் அனைவரும் சமம் எனபதை உயிர்ப்பிக்கும் ஆண்டாக மாறும் என்றும் தெரிவித்தார்.

இன்று (11) பிற்பகல் நுவரெலியாவில் நடைபெற்ற போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டின் மத்திய மாகாண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

 

நாம் அனுபவித்த துன்பங்களை நமது பிள்ளைகள் அனுபவிக்காத ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் என்றும், எந்தவொரு பிள்ளையும் போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு பலியாகாத நாட்டைக் கட்டியெழுப்புவோம் என்றும் ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார்.

 

இந்த வேலைத்திட்டத்தின்போது பொறுமையாக காத்திருக்க யாருக்கும் நியாயமான உரிமை இல்லை என்று வலியுறுத்திய ஜனாதிபதி, இவ்விடயத்தில் தன்னைப் பற்றி தான் உறுதியளிப்பதாகவும்,மதத் தலைவர்கள், அரசியல் அதிகாரம், பாதுகாப்புப் படையினர் மற்றும் பொதுமக்கள் என்ற வகையில் அனைவருக்கும் உள்ள பொறுப்புகளை நிறைவேற்ற ஒன்றிணையுமாறு அழைப்பு விடுத்தார்.

 

தேசிய பேரழிவாக மாறியுள்ள போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்க தேசிய அளவிலான அரசியல் தலைமை, செயற்திறனாக முடிவெடுக்கும் பொறிமுறை மற்றும் பரந்த பொதுமக்கள் பங்கேற்புடன் முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்பாடு செயல்படுத்தப்படுகிறது.

எங்கு செல்ல வேண்டும். அவர் பொலிஸிற்குச் செல்வார். தனக்கு நடந்த அநீதிக்கு அவர் நீதியை எதிர்பார்ப்பார். அவர் நீதிமன்றத்தை நாடுவார். அநீதிக்கு நீதியை எதிர்பார்ப்பார்.

 

அநீதிக்கு எதிராக நீதியை நிலைநாட்ட சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்த வேண்டும். நாட்டை கட்டியெழுப்பும் பயணத்தில் இது மிகவும் அத்தியாவசியமானது. எனவே சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவோம். சட்டத்தின் ஆட்சி தொடர்பில் மக்கள் மத்தியில் சந்தேகம் உள்ளது. சட்டம் சிலந்திவலையைப் போன்றது என்பார்கள். சிறிய விலங்குகள் சிக்கிக் கொள்ளும் பெரியவை தப்பித்துக் கொள்ளும் என்பார்கள்.

 

இவ்வாறு தான் பொதுமக்கள் மத்தியில் சட்டம் தொடர்பான நம்பிக்கை காணப்படுகிறது. ஆனால் நாட்டை கட்டியெழுப்புவதற்கு சட்டத்தின் முன் அனைவரும் சமன் என்ற வசனத்திற்கு உயிர் கொடுக்க வேண்டும். ஒருவருக்குள்ள அதிகாரம் ,செல்வம் என்பவற்றினால் சட்டத்தில் இருந்து தப்ப முடியும் என்ற நம்பிக்கையை கொடுக்கக் கூடாது. பணம்,அதிகாரம் இருந்தால் மட்டுமன்றி நியாயமாக சட்டம் நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கை பொதுமக்களுக்கு எழவேண்டும்.

 

சட்டம் தன்னிடம் வர முடியாது.தன்னிடம் அதிகார வளையம் இருக்கிறது என சட்டத்தை புறக்கணிக்கும் சிலர் இருந்தார்கள். அவ்வாறான நாட்டினால் முன்னோக்கிச் செல்ல முடியாது. அனைவரும் சட்டத்திற்குக் கீழ்ப்படிய வேண்டும். சட்டத்திற்க அஞ்ச வேண்டும். அந்த நிலை எமது நாட்டில் இல்லை.

 

2026 ஆம் ஆண்டு சட்டத்தின் முன் அனைவரும் சமன் என்ற வசனத்திற்கு உயிர்கொடுக்கும் வருடமாக இருக்கும் என நான் உறுதியளிக்கிறேன்.அனைவரும் சட்டத்திற்கு அடிபணிய வேண்டும். சட்டத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்த எந்த நாடும் முன்னேறியது கிடையாது.

 

சட்டம் வீழ்ச்சியடைந்த இடத்தில் குற்றவாளிகளின் அதிகாரம் மேலோங்கியிருக்கும்.சட்டம் இல்லாத இடத்தில் குற்றவாளிகள் உச்சத்தில் இருப்பார்கள். இது தான் நிஜம். அவ்வாறான நாட்டினால் முன்னேற முடியாது. சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்திய நாட்டை உருவாக்க பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்,அமைச்சின் செயலாளர், பொலிஸ் மாஅதிபர்,முப்படை அனைவரும் ஒன்றுபட்டு போராடுவோம். கருப்பு நாடுகள் பற்றி அறிந்திருப்பீர்கள்.

 

சட்டத்தின் வீழ்ச்சியே அந்த நாடுகளில் காணப்படுகின்றன. சட்டம் வீழ்ச்சியடைந்த இடத்தில் குற்றவாளிகள் நீச்சலடிப்பார்கள்.சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்யும் நாட்டை நாம் உருவாக்குவோம். எமக்கு எவ்வாறான நாடு தேவை. நாம் பெற்ற துன்பங்களை எமது பிள்ளைகள் அனுபவிக்கக் கூடாது. நாம் எதிர்கொண்ட சவால்களை எமது பிள்ளைகளும் முகங்கொடுக்காத நாடு அவசியம்.

செல்கிறது என்பதை உணர வேண்டும். போதைப்பொருள் வர்த்தகர்களுக்குப் பாதுகாப்பும் அரவணைப்பும் வழங்கிய அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். இன்னும் சில காலம் செல்லும்போது, போதைப்பொருள் வர்த்தகர்களே அரசியல்வாதிகளாக மாறிவிடுவார்கள்.

 

கட்சிகள் உருவாக்கப்படுகின்றன. இது தொடர்பாக ஏற்கனவே பல பிரதேச சபை உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பணம் பெற்றது தெரியவந்துள்ளது. அவர்கள் பிரதிநிதித்துவப்படுவதை அறிவோம். இதனை இவ்வாறு வளர விட முடியாது.

 

ஜனாதிபதி என்ற ரீதியில் எனக்கும், உங்கள் அனைவருக்கும் ‘நடப்பது நடக்கட்டும்’ என்று ஒதுங்கி இருக்க முடியும். எமது பிள்ளை இன்னும் பாதிக்கப்படவில்லை தானே என இருந்து விடலாம். எமது வீட்டில் இந்தப் பிரச்சினை இல்லையென கண்டு கொள்ளாமல் இருக்கலாம். ஆனால், இந்த அழிவு ஒரு கிராமத்தையோ, வீட்டையோ, குடும்பத்தையோ விட்டுவைக்காமல் தேசிய அளவில் பரவும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது. அப்படியாயின் நாம் என்ன செய்யவேண்டும்.

 

கண்டு கொள்ளாமல் இருப்பதா? அல்லது மோத வேண்டுமா? ஒதுங்கி நிற்பதற்கு நம் எவருக்கும் நியாயமான உரிமை கிடையாது. எனவே, இதனைத் தோற்கடிக்க நாம் அனைவரினதும் தலையீடு அவசியம். என்னைப் பற்றி என்னால் உறுதியளிக்க முடியும். அதேபோல் எமது அரசாங்கம் இது குறித்து ஏகோபித்த, பின்வாங்காத தீர்மானத்தில் இருக்கிறது.

 

எமது அரச அதிகாரிகள், பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட அதிகாரிகள் என நாம் அனைவரும் ஒரே இடத்திற்கு வந்துள்ளோம். இதற்கு மக்களின் ஒத்துழைப்பு அவசியம். கிராமத்தில் போதைப்பொருள் விற்பனை செய்பவர் மறைந்திருப்பவர் அல்ல, அவர்கள் இனி சமூகத்தில் ஒளிந்திருக்கவில்லை. ஆனால், அவர்கள் சமூகத்தைப் பயமுறுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு பாரிய பணியை ஆற்றி வருகின்றனர்.இதனுடன் தொடர்புள்ள குற்றவாளிக் குழுக்களை கைது செய்ய வேண்டும். பலர் கைதாகியுள்ளனர். பலர் வெளிநாடுகளில் உள்ளனர். அவர்களில் ஒரு குறிப்பிட்ட அளவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும் கைது செய்யவேண்டும். அதேபோல், இதனால் பாதிக்கப்பட்டவர்களை நாம் காப்பாற்ற வேண்டும். அதற்காக நாடு முழுவதும் புனர்வாழ்வு நிலையங்களை அமைப்பதற்கு இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு

 

செய்யப்பட்டுள்ளது. எமது மகா சங்கத்தினர் மற்றும் ஏனைய மதத் தலைவர்கள் அனைவரையும் இணைந்து ஒரு தேசிய சபை நிறுவப்பட்டுள்ளது. அதில் பரந்தளவில் ஆராயப்படுகிறது. போதைப்பொருளுக்கு அடிமையான ஒருவருக்கு மீண்டும் அவரது வாழ்வை பெற்றுக்கொடுக்க நாம் முயற்சிக்க வேண்டும்.

 

உங்கள் உறவினர் ஒருவர் அடிமையான குடும்பத்திற்குச் சென்று பாருங்கள். நண்பரின் வீட்டுக்குச் சென்று பாருங்கள். தற்பொழுது அடிமையானவரை புனர்வாழ்வு அளிக்க வேண்டும். அதற்கான திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இந்தக் காலத்தில் வாழும் நாம், இந்த பேரழிவு குறித்து நன்கு அறிந்துள்ள நாம், இதிலிருந்து எமது பிள்ளைகளை மீட்டெடுக்க வேண்டும். அதற்காக நாம் முன்வராவிட்டால், வேறு யார் முன்வருவார்கள்? இதனை நாமே செய்ய வேண்டும். எனவே, நாம் ஒன்றிணைந்து இந்தப் பேரழிவைத் தோற்கடிப்போம்.

 

இதில் எமது மகா சங்கத்தினருக்கும் ஏனைய மதத் தலைவர்களுக்கும் பாரிய பொறுப்பு இருப்பதாக நான் நம்புகிறேன். உங்களது போதனைகளில் ஒரு 5-10 நிமிடங்கள் இந்தப் பேரழிவு குறித்து சமூகத்திற்கு ஒரு செய்தியை வழங்கினால், எம்மால் ஒரு பாரிய சமூகக் கருத்தை கட்டியெழுப்ப முடியும். பாடசாலை ஆசிரியர்கள், அதிபர்கள் இந்தச் செய்தியை சமூகத்திற்குக் கொண்டு சென்றால், இதனை ஒரு சமூக நிலைப்பாடாக மாற்ற முடியும். எனவே, இது அரசாங்கம், பொலிஸ், இராணுவம் ஆகியவற்றின் பணி மாத்திரமல்ல, ஒட்டுமொத்த சமூகத்தினதும் பணியாக மாற வேண்டும். எம்மால் இந்தப் பேரழிவைத் தோற்கடிக்க முடியும். அதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். எனவே, ஒதுங்கி நிற்காமல் இந்தப் பேரழிவைத் தோற்கடிக்க முன்வருமாறு நான் உங்கள் அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன்.

 

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு இருந்த அரசியல் பாதுகாப்பை முழுமையாக நீக்கிய அரசாங்கம் நாம். இந்தப் பணியைச் செய்வதற்கு பொலிஸாருக்கும் இராணுவத்திற்கும் நாம் முழுமையான சுதந்திரத்தை வழங்கியுள்ளோம். எமக்குக் காப்பாற்றுவதற்கு போதைப்பொருள் வியாபாரிகளோ கடத்தல்காரர்களோ எவரும் இல்லை. எனவே, உங்களது தொழில்முறை கௌரவம், பதவியின் பொறுப்பு மற்றும் உங்களது கடமையை நிறைவேற்ற முன்வாருங்கள். அதற்கான பாதுகாப்பையும் சுதந்திரத்தையும் நாம் பெற்றுத் தருவோம்’’ என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button