இலங்கை

பொதுமக்களுக்கு பொலிஸார் அவசர எச்சரிக்கை

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளரின் பெயரைப் பயன்படுத்தி, திட்டமிட்ட குழுவொன்று போலி மின்னஞ்சல்களை அனுப்பி வருவதாக இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகரவின் பெயரைப் பயன்படுத்தி, மிகவும் தந்திரமான முறையில் இந்த மின்னஞ்சல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

 

இதில் “NationWide Could, Protection 24/7” போன்ற வாசகங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

 

பொதுமக்களை ஏமாற்றிப் பணத்தைச் சூறையாடுவது அல்லது அவர்களின் தனிப்பட்ட தகவல்களைத் திருடுவதுமே இந்த மோசடியின் முக்கிய நோக்கம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

 

[email protected], [email protected] ஆகிய மின்னஞ்சல் முகவரிகளிலிருந்து வரும் செய்திகள் குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

இந்த மின்னஞ்சல் முகவரிகள் எவையும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குச் சொந்தமானவை அல்ல என்பதை காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளனர்.

 

உங்களின் வங்கித் தகவல்கள், அடையாள அட்டை விபரங்கள் அல்லது கடவுச்சொற்களை இந்த மின்னஞ்சல்களுக்குப் பதிலளிப்பதன் மூலம் வழங்க வேண்டாம்.

 

இத்தகைய சந்தேகத்திற்குரிய மின்னஞ்சல்களில் வரும் இணைப்புகளை கிளிக் செய்வதைத் தவிர்க்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button