உலகம்

எப்ஸ்டீன் கோப்புகளில் நோர்வே இளவரசியின் பெயர்

அமெரிக்க நீதித் திணைக்களம் (DOJ) வெளியிட்டுள்ள எப்ஸ்டீன் தொடர்பான சமீபத்திய ஆவணங்களில், நோர்வே நாட்டின் முடிக்குரிய இளவரசி மெட்டே-மாரிட் (Crown Princess Mette-Marit) பெயர் இடம்பெற்றுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

குறிப்பாக, 2013ஆம் ஆண்டு இடம்பெற்ற மின்னஞ்சல் பரிமாற்றங்கள் ஊடாக அவர் எப்ஸ்டீனின் புளோரிடா இல்லத்துக்குச் சென்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 

 

 

எப்ஸ்டீனின் முன்னாள் உதவியாளர் லெஸ்லி கிராஃப், எப்ஸ்டீனின் இல்ல முகாமையாளர் ஜானுஸ் பனாசியாக்கிற்கு அனுப்பிய மின்னஞ்சலில், “இளவரசி மெட்டே ஞாயிற்றுக்கிழமை மியாமி விமான நிலையத்திற்கு வருவார்” என்றும், அவரை அங்கிருந்து அழைத்து வந்து எப்ஸ்டீனின் பாம் பீச் (Palm Beach) இல்லத்தில் விடுமாறும் குறிப்பிட்டுள்ளார்.

 

அந்த மின்னஞ்சலில் இளவரசியின் தொலைபேசி எண்ணும் இணைக்கப்பட்டுள்ளது.

 

இது குறித்து நோர்வேயின் பொது ஒளிபரப்பு நிறுவனமான NRK-இடம் கருத்து தெரிவித்துள்ள இளவரசி, எப்ஸ்டீனுடன் தொடர்பு வைத்திருந்தமை குறித்து தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

 

அவரது பின்னணியை நான் இன்னும் ஆழமாக ஆராய்ந்திருக்க வேண்டும். அந்த இல்லத்தில் நான் நான்கு நாட்கள் தங்கியிருந்ததை ஒப்புக்கொள்கிறேன். இது எனக்கு மிகுந்த சங்கடத்தைத் தருகிறது,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

கடந்த 2019ஆம் ஆண்டு முதலே எப்ஸ்டீனுடனான நட்புக்காக இளவரசி விமர்சனங்களை எதிர்கொண்டு வரும் நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்த விரிவான ஆதாரங்கள் மேலும் விவாதங்களை எழுப்பியுள்ளன

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button