இலங்கை

டிட்வாவின் தாக்கம் – உயர்விலேயே இருக்கும் மரக்கறி விலைகள்!

டிட்வா சூறாவளியின் தாக்கம் இன்னும் நீடிப்பதால், மரக்கறிகளின் விலைகள் வழமையான ஆண்டுகளை விட உயர்வாகவே காணப்படுவதாக பேலியகொட மெனிங் சந்தை வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

 

மெனிங் சந்தை வர்த்தகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் எஸ்.எம். உபசேன இது குறித்து ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையில், கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் விலைகள் ஓரளவு குறைந்திருந்தாலும், வழமையான காலப்பகுதியில் நிலவும் குறைந்த விலைக்கு இன்னும் வரவில்லை எனக் குறிப்பிட்டார்

 

அத்துடன் சூறாவளி காரணமாக மரக்கறி விநியோகம் சுமார் 25 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

 

இந்தநிலையில் ஒரு கிலோகிராம் லீக்ஸ் 400 ரூபாயாகவும், ஒரு கிலோகிராம் கெரட் 350 ரூபாயாகவும், ஒரு கிலோகிராம் தக்காளி 350 ரூபாயாகவும், ஒரு கிலோகிராம் பச்சை மிளகாய் 500 ரூபாயாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

 

நவம்பர் மாத இறுதியில் நிலவிய சீரற்ற காலநிலை மற்றும் சூறாவளி காரணமாக பயிர்ச்செய்கைகள் பாதிக்கப்பட்டமையே இந்த விலை ஸ்திரத்தன்மையின்மைக்கு முக்கிய காரணமாகும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button