இலங்கை

15 சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி விசேட வர்த்தமானி அறிவித்தல்

மின்சார விநியோகம் உள்ளிட்ட, 15 சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதியினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

 

அதன்படி, மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகள், எரிபொருள், பெட்ரோலிய பொருட்கள், எரிவாயு விநியோகம், மருத்துவமனைகள், மருந்தகங்கள், பயணிகள் அல்லது சரக்கு போக்குவரத்து சேவைகள் என்பன அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

 

அத்துடன் நீர் வழங்கல் சேவைகள், வானூர்தி நிலையங்கள், துறைமுகங்கள், தொடருந்து பாதைகள் அல்லது வான்வழி போக்குவரத்துச் சேவைகள், சுற்றுலாச் சேவைகள், உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கல், பாதுகாப்பு மற்றும் விநியோகம் தொடர்பான சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

 

அவசர நோயாளர் காவு வண்டி சேவைகள், இலங்கை மத்திய வங்கி உட்பட அனைத்து அரச வங்கி மற்றும் காப்புறுதி சேவைகள், தீயணைப்பு சேவைகள், தொலைபேசி, தொலைத்தொடர்பு, ஊடகம் தொடர்பான சேவைகள், தாழ் நிலங்களை மீட்டெடுப்பது, அபிவிருத்தி செய்தல் தொடர்பான சேவைகள், விவசாயம் மற்றும் விவசாய காப்புறுதி தொடர்பான சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button