
அமெரிக்க மத்திய அரசாங்கத்தின் பல துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு காலாவதியாவதைத் தடுப்பதற்கான பாதீட்டுத் திட்டத்தை (spending package) நிறைவேற்றுவதற்கான காலக்கெடுவை காங்கிரஸ் (Congress) தவறவிட்டுள்ளது.
இதன் காரணமாக, குறைந்தது திங்கட்கிழமை வரை அந்நாட்டின் அரசாங்கம் ஒரு பகுதி பணிநிறுத்தத்திற்கு (Partial Shutdown) உள்ளாகியுள்ளது என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பான சட்டமூலம் தற்போது பிரதிநிதிகள் சபையின் (House) ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது.





