தமிழீழம்

யாழ். தையிட்டி விகாரை போராட்ட களத்தில் பதற்றம் : காவல்துறையினர் அராஜகம்

யாழ்ப்பாணம் தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராக முன்னெடுக்கப்படும் போராட்ட களத்தில் சற்றுமுன்னர் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் வாயத் தர்க்கத்தில் ஈடுபட்ட காவல்துறையினர் போராட்டக்காரர்கள் அமைத்திருந்த கூடாரங்களை அகற்றியுள்ளனர்.

யாழ்ப்பாணம் – தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் இரண்டாவது நாளாக இன்று தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது.

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு வலியுறுத்தியும், திஸ்ஸ விகாரை அமைக்கப்பட்டுள்ள காணி, அதனைச் சூழவுள்ள காணிகளைக் காணி உரிமையாளர்களிடம் மீளவும் வழங்குமாறு கோரியும் குறித்த போராட்டம் நடைபெறுகின்றது.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி பாதிக்கப்பட்ட பொதுமக்களுடன் இணைந்து மாதாமாதம் முன்னெடுக்கும் தொடர் போராட்டம் நேற்றும் (03), இன்றும் (04) தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு அருகில் நடத்தப்படுகின்றது.

விடுக்கப்பட்டுள்ள அழைப்பு
நேற்று மாலை 04 மணி தொடக்கம் மாலை06 மணி வரையும், பெளர்ணமி தினமான இன்று காலை 06 மணி தொடக்கம் மாலை 06 மணி வரையும் இந்தப் போராட்டம் இடம்பெறவுள்ளது.

இந்தப் போரட்டத்தில் காணி உரிமையாளர்கள், பொது மக்கள், அரசியல் கட்சி உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டுள்ளனர்.

குறித்த போராட்டத்தில் அனைத்துத் தரப்பினரையும் கலந்து கொண்டு வலுச் சேர்க்குமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button