தமிழீழம்

இயற்கையின் சீற்றத்துக்கு மத்தியிலும் மாவீரர் நினைவேந்தலுக்கு தயாராகும் தாயக மக்கள்

தாயகத்தில் நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் வடக்கு மக்கள் மாவீரர் நினைவேந்தலுக்கு தயாராகி வருகின்றனர்.

கொட்டும் மழையிலும் மக்கள், மீண்டும் தன்னெழுச்சியாக மாவீரர் நினைவாலயங்களை நோக்கி சென்று கொண்டிருக்கின்றார்கள்.

மாவீரர்களின் நினைவுநாள் இன்று தமிழர்கள் மத்தியில் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.

வன்னி – விளாங்குளம்

அதேநேரம், நாட்டின் வடக்கு – கிழக்கு பகுதிகளில் கடுமையான காலநிலை நிலவி வருகின்றது.

வன்னி – விளாங்குளம் வன்னி – விளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன், மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தியதோடு, மாவீரர் தின ஏற்பாடுகளையும் பார்வையிட்டார்.

முழங்காவில்

அதேவேளை, முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லத்திலும் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தியதோடு, மாவீரர் தின ஏற்பாடுகளையும் பார்வையிட்டார்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button