இந்தியா

குண்டு வெடிப்புக்களால் அதிரும் இந்தியா…! காவல் நிலையத்தில் வெடித்து சிதறிய வெடிபொருட்கள்: 7 பேர் பலி

காஷ்மீர் காவல் நிலையத்தில் வெடிபொருள் வெடித்த சம்பவத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவத்தில் 30 க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என தெரிவிக்கப்படுகின்றது.

பயங்கரவாத தாக்குதலில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில் மீண்டும் வெடிபொருள் வெடித்து 7 பேர் பலியாகி உள்ள சம்பவம் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

கார் குண்டு வெடிப்பு

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், தலைநகர் டெல்லியில் செங்கோட்டை அருகே கடந்த 10ம் திகதி கார் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த பயங்கரவாத தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த கார் குண்டு வெடிப்பு தொடர்பாக 8 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே இந்த தாக்குதல் தொடர்பாக பரிதாபாத்தில் காவல்துறையினர் நடத்திய சோதனையில் 3000 கிலோகிராம் அமொனியம் நைட்ரைட் என்ற வெடிமருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தை சேர்ந்த முஸமில் ஷகீல் கனியா என்ற நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

காவல்துறையினர் தீவிர விசாரணை

இந்நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்கள் விசாரணைக்காக ஜம்மு காஷ்மீரின் நவ்காம் காவல்துறை நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தது.

இந்த சூழலில் வெடிபொருட்களை ஆய்வு செய்து கொண்டிருந்தபோது திடீரென அந்த வெடிபொருட்கள் வெடித்ததால் தடயவியல் குழு, காவல்துறையினர் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button