இந்தியா

டிசம்பர் 6இல் குளோபல் வர்த்தக மாநாடு ஆரம்பம் – அவுஸ்திரேலியாவில் இந்திய நிறுவனங்களுக்கு மானியம்

உலகத் தமிழ் வர்த்தக சங்கம், உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு இணைந்து நடத்தும் 12வது குளோபல் வர்த்தக மாநாடு எதிர்வரும் டிசம்பர் மாதம் 6, 7ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டில் இந்திய தமிழக சிறு குறுந்தொழில் நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழிலதிபர்கள், முதலீட்டாளர்கள், புதிய கிளைகளை நிறுவுவோர் ஏற்றுமதி – இறக்குமதியாளர்கள் ஒன்றிணையவுள்ளனர்.

இம்மாநாட்டுக்கு தமிழக அரசின் சிறு குறுந்தொழில் அமைச்சகத்தின் மானியங்கள் பெறும் இவ்வேளையில் இந்திய மற்றும் தமிழக அரசு வேளாண்மை பொருட்களை ஏற்றுமதி செய்யவும், சிறுதானியங்களை உலகெங்கும் பயன் பெறும் வகையில் வேளாண்மை துறை அமைச்சகம் இம்மாநாட்டில் பங்கேற்கவுள்ளது.

மேலும், இந்தியா – அவுஸ்திரேலியா அரசுகளின் தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தின்படி, அவுஸ்திரேலியாவில் தொழில் முறை ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு அவுஸ்திரேலியா அரசு மானியங்களை வழங்கவுள்ளது.

அந்த மானியங்களை பெற பல்வேறு நாடுகளில் இருந்து அவுஸ்திரேலியாவில் தொழில் தொடங்கவும் தொழில்முறை ஆராய்ச்சிகளை செய்யவும் பல்வேறு நிறுவனங்கள் போட்டியிட்டு இம்மாநாட்டில் கலந்துகொள்ள ஆர்வம் தெரிவித்துள்ளதாக உலகத் தமிழ் வர்த்தக சங்கத் தலைவர் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் செல்வகுமார் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button