
காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலை ஐக்கிய நாடுகள் சபை கண்டித்துள்ளது.
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலைக் கண்டித்த ஐக்கிய நாடுகள் சபையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் “அமைதிக்கான வாய்ப்பையும், மிகவும் நீதியான மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தை நோக்கிய பாதையையும்” வீணாக்க வேண்டாம் என்று சர்வதேச சமூகத்தை வலியுறுத்தியுள்ளார்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு டர்க் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கீழ் இஸ்ரேல் தனது கடமைகளுக்கு இணங்க வேண்டும் என்றும், எந்தவொரு மீறல்களுக்கும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
காசாவில் வன்முறைத் தாக்குதல் முடிவுக்கு வரக்கூடும் என்ற நம்பிக்கையுள்ள நிலையில், இந்த தாக்குதல்கள் நிகழ்ந்தது வருத்தமளிக்கிறது, என்று அவர் கூறினார்.
போரில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும் நல்லெண்ணத்துடன் செயல்பட்டு போர் நிறுத்தத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.





