உலகம்

30,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய அமேசான் நிறுவனம் தீர்மானம்

அமேசான் நிறுவனம் 30,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய தீர்மானித்துள்ளது.

நிறுவனச் செலவுகளை குறைப்பதற்காகவும், கொவிட் காலத்தில் அதிகளவான ஒன்லைன் தேவை காரணமாக கூடுதலாக நியமித்த பணியாளர்களை குறைக்கவும் இந்த தீர்மானம் எடுத்துள்ளதாக அமேசான் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

2022 ஆம் ஆண்டுக்கு பின்னர் அமேசான் நிறுவனம் மேற்கொள்ளும் மிகப்பெரிய பணிநீக்கம் இதுவாகும்.

கொரோனா தொற்றுநோய் காலத்தில் அமேசானில் அதிகமானோர் வேலைக்கு இணைத்துக்கொள்ளப்பட்டனர்.

2019 ஆம் ஆண்டில் அமேசானில் 7,98,000 பேர் பணி புரிந்தனர்.

பின்னர் 2021 ஆம் ஆண்டின் இறுதியில் 16 லட்சமாக உயர்ந்தது. அதனைத் தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை அமேசான் பணிநீக்கம் செய்தமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button