உலகம்

கனடா மீதான வர்த்தகப் போர் தீவிரம் – 10% வரியை உயர்த்திய அமெரிக்கா

கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரிகளை மீண்டும் ஒருமுறை அதிகரிப்பதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரொனால்ட் ரீகனைக் கொண்ட வரி எதிர்ப்பு விளம்பரத்தை¸ ஒன்ராறியோ மாகாணம் ஒளிபரப்பியதை அடுத்தே அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ட்ரம்ப், சமூக ஊடகங்களில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், குறித்த விளம்பரத்தை ‘மோசடி’ எனவும் அழைத்தார் அத்துடன், உலக தொடர் பேஸ்போல் செம்பியன்சிப்பிற்கு முன்னதாக அதை அகற்றாததற்காக கனேடிய அதிகாரிகளை அவர் சாடியுள்ளார்.

உண்மைகளை கனடா தவறாகச் சித்தரித்ததாலும், விரோதமான செயல்களாலும், கனடா மீதான வரியை, இப்போது செலுத்தும் தொகையை விட 10 வீதமாக உயர்த்துவதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பிரச்சினையை முன்வைத்து, முன்னதாக, ட்ரம்ப் கடந்த வியாழக்கிழமை கனடாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளிலிருந்து ட்ரம்ப் விலகினார்.

இதனையடுத்து ஒன்ராறியோ பிரதமரும் குறித்த விளம்பரத்தை நீக்குவதாகக் கூறியிருந்தார்

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button