இலங்கை

சீரற்ற வானிலையால் 12,142 பேர் பாதிப்பு – 4 பேர் உயிரிழப்பு

நாட்டில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் 14 மாவட்டங்களைச் சேர்ந்த 3,036 குடும்பங்களைச் சேர்ந்த 12,142 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் சீரற்ற வானிலையால் 4 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

மேலும், 481 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதுடன், 02 வீடுகள் முழுமையாகச் சேதமடைந்துள்ளன.

இதேவேளை, கடந்த சில நாட்களாக வங்காள விரிகுடாவில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுநிலை தற்போது வலுவிழந்துள்ளமையினால், எதிர்வரும் நாட்களில் நாட்டின் பல பகுதிகளிலும் மழை நிலைமை குறைவடையக் கூடும் என யாழ். பல்கலைக்கழக புவியியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

வானிலை தொடர்பில் எமது செய்திச் சேவைக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button