
கிளிநொச்சியில் இருவேறு பகுதிகளில் இரண்டாம் லெப்டினல் முதல் பெண் மாவீரர் மாலதியின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டது.
தர்மபுரம் பகுதியிலும் கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சண்முகம் ஜீவராசா தலைமையில் தனியார் மண்டபம் ஒன்றில் மலர் வணக்கம் செலுத்தப்பட்டு அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றது.
அதேபோன்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் முதற்பெண் மாவீரர் மாலதி அவர்களின் 38 ஆவது நினைவேந்தல் நிகழ்வு கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை மாலை, 3.00 மணியலவில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மற்றும் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் மற்றும் பிரதேச சபையின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டு தமது அஞ்சலியை செலுத்தினர்.







