தமிழீழம்

யாழ். பருத்தித்துறையில் தியாக தீபத்தின் இறுதிநாள் நினைவேந்தல்!

தமிழர் தேசத்திற்காக தன்னுயிரை ஆகுதியாக்கிய தியாக தீபம் திலீபனின் 38வது ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் நிகழ்வுகள் யாழில் முன்னெடுக்கப்பட்டன.

யாழ்ப்பாணம் – பருத்தித்துறையில் உள்ள அவரது நினைவாலயத்தில் இன்று (26) காலை 8 மணிமுதல் அடையாள உண்ணா விரதத்துடன் வடமராட்சி மக்களால் நினைவேந்தப்பட்டது.

இதன்போது பொது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து தியாகி திலீபனின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டது.

மலர் அஞ்சலி
அதனை தொடர்ந்து நினைவேந்தலில் கலந்துகொண்டவர்களால் மலர் அஞ்சலிகள் செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் மதகுருமார்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டு தியாகி திலீபனுக்கு மலரஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button