தமிழீழம்

மன்னாரில் தொடரும் போராட்டம் : வவுனியாவில் இருந்து கிடைத்த ஆதரவு

மன்னாரில் காற்றாலை மின் கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டம் 49வது நாளாகவும்  நடைபெற்றது.

49வது நாளான நேற்று (20) மாலை வவுனியா பம்பைமடுவில் இருந்து அருட்தந்தை, அருட்சகோதரிகள் தலைமையில் இளையோர் குழு ஒன்று வருகை தந்து குறித்த போராட்டத்திற்கு தமது ஆதரவை தெரிவித்துள்ளனர்.

போராட்டத்தில் கலந்துகொண்ட இளையோர்கள் காற்றாலை மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக எழுதப்பட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ச்சியான ஆதரவு

மன்னாரில் காற்றாலை மின் கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டத்திற்கு நாளாந்தம் மன்னார் மாவட்டம் உள்ளடங்களாக நாட்டின் பல பாகங்களில் இருந்தும் கிராம மக்கள், பொது மற்றும் சிவில் அமைப்புக்கள் தொடர்ச்சியாக ஆதரவை வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று (20) மாலை வவுனியா பம்பைமடுவில் இருந்து அருட்தந்தை, அருட்சகோதரிகள் தலைமையில் இளையோர் குழு ஒன்று வருகை தந்து தமது ஆதரவை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button