
பல தசாப்தங்களாக சர்வதேச ரீதியில் இலங்கையின் புத்திஜீவி அரசியல்வாதியாக அறியப்பட்ட
முன்னாள் ஜனாதிபதி ரணில் கைது செய்யப்பட்டமை இலங்கையில் மட்டுமல்ல சர்வதேசரீதியிலும் ஒரு முக்கியமான செய்தி.
பொதுவாக எல்லா நாடுகளிலும் ஆட்சி மாற்றத்தின் பின் இடம்பெறுகின்ற ஒரு அரசியல் பழிவாங்கல் போல தோற்றப்பாடு இருந்தாலும், கடை நிலை அரச ஊழியர் வரையில் இது ஒரு கண்டிப்பான செய்தியை சொல்லி இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.

-இலங்கையில் இனி அரச பணத்தை துஷ்பிரயோகம் செய்தால் அல்லது கையாடினால் தண்டனையிலிருந்து நீங்கள் தப்ப முடியாது. – இது முன்னேறும் நாட்டுக்கு மிக ஆரோக்கியமான ஒரு அறிவிப்பு.
ஆனால் ஆழமாகப் பார்த்தால் கொஞ்சம் சரிவடையத் தொடங்கும் NPP மற்றும் ஜனாதிபதியின் செல்வாக்கை தூக்கி நிறுத்த, ஒரு பரபரப்பான அழுத்தமான செய்தி தேவைப்பட்டிருக்கிறது என்பதும் உண்மை.
தன் மனைவிக்காக மேற்கொள்ளப்பட்ட இலண்டன் பயணத்தில் அரசு நிதியை ரணில் துஷ்பிரயோகம் செய்ததை சரியாக ஆதாரங்களுடன் இத்தனை நாட்கள் வைத்திருந்தது எல்லாம் பாராட்டப்பட வேண்டிய விடயங்கள் தான்.
ஆனால் எல்லோரும் அறிந்த ராஜபக்ச குடும்பத்தினர் செய்த நிதி துஷ்பிரயோகங்கள் ஊழல்களுக்கு எப்போது தண்டனை வழங்கப்படும்?
மகாநாயக்கர்கள் உட்பட பெரும் சிங்கள மக்களின் ஆதரவு இருக்கின்ற யுத்தத்தை வென்று கொடுத்த மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இப்படி ஒரு தண்டனைக்கு உட்படுத்தப்படுவாரா? அல்லது இது soft targets க்கு மட்டும் தானா??

பொருளாதார அபிவிருத்தி, விலைவாசி குறைப்பு, அரச சம்பள உயர்வு இப்படியான விடயங்கள் எல்லாம் மேடைப்பேச்சு ஒரு உத்வேகத்தில் பேசப்பட்டவையாக விட்டு விடுவோம்! ஆனால் ஊழல் செய்த ராஜபக்ஷ குடும்பத்தினரை கெத்தாக இந்த அரசாங்கம் நீதிமன்றம் மூலமாக சிறையில் அடைக்குமாக இருந்தால்… ஜனாதிபதியை இலங்கையில் எல்லா இளைஞர்களும் கொண்டாடுவார்கள்!





