
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில் தற்போது நீதிமன்றில் வாதபிரதிவாதங்கள் இடம்பெற்றுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதல் இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டதை தொடர்ந்து கோட்டை நீதவான் நீதிமன்றத்தைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இரண்டாம் இணைப்பு
குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
அவர் விரைவில் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மூன்றாம் இணைப்பு
குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சற்று நேரத்திற்கு முன்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
நான்காம் இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும் 30 நிமிடங்களின் பின்னர் தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.





