இலங்கை

50 ஆயிரம் வெற்றிடங்கள், 40 ஆயிரம் பட்டதாரிகளுக்கு தொழில் இல்லை: சஜித் குற்றச்சாட்டு

அரசுத் துறையில் 50,000க்கும் மேற்பட்ட வெற்றிடங்கள் இருந்தபோதிலும், சுமார் 40,000 தொழில்கோரும் பட்டதாரிகளை அரசாங்கம் கைவிட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.

தொழில்கோரும் பட்டதாரிகள் சங்க உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்துக்கு சமுகமளித்து தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் விளக்கியிருந்த நிலையில் இந்தப் பிரச்சினைகளை கேட்டறிந்த கருத்துவெளியிடும்போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனை தெரிவித்தார்.

அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையில் 20,000 பேரை ஆசிரியர் தொழிலுக்கும்,3,000 பட்டதாரிகளை விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதத் துறைகளிலும், இதற்கு அப்பாலான துறைகளில் 9,000 பேரையும் உள்ளீர்ப்புச் செய்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த உறுதிமொழிகள் எதுவும் இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை.

தொழில்கோரும பட்டதாரிகள் தற்போது உதவியற்றவர்களாக கைவிடப்பட்டுள்ளனர் என்றும், அரசாங்கத்துக்காக பிரசாரம் செய்த சிலருக்கு இளைஞர் சேவை நிறுவனங்களில் பணிப்பாளர் பதவிகள் போன்ற பதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.

இலவசக் கல்வியின் மூலம் பட்டம் பெற்றவர்களை பெறுமானம் அற்றவர்கள் என்று குறிப்பிடுவது வெட்கக்கேடானதும், அவமரியாதைக்குரியதுமான செயலாகும்.

சுமார் 50,000 வெற்றிடங்கள் உள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய நாடாளுமன்றததில் தெரிவித்தபோதிலும், 40,000 பட்டதாரிகள் இன்னும் வேலைக்காக காத்திருக்கிறார்கள்.

எனவே, இந்த பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்வரை ஐக்கிய மக்கள் சக்தியும், கூட்டணியும் ஜனநாயக போராட்டத்தில் ஈடுபடும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தா

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button