இந்தியா

நிலச்சரிவில் சிக்கிய ஜம்மு காஷ்மீர்

இமாசலப் பிரதேசத்தில் தொடர்ந்து பல நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதனுடன் நிலச்சரிவு, வெள்ளம் மற்றும் மேக வெடிப்புகளும் ஏற்பட்டு மாநிலம் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றது.

இதற்கிடையே, ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் பகுதியில் மேகவெடிப்பு காரணமாக நேற்று (14) பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் சிக்கி 120 பேர் படுகாயம் அடைந்தனர்.

வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். நிலச்சரிவில் சிக்கி பலியானோருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 100 இற்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button