
ஜனாதிபதி பதவியேற்று ஒரு வருடமாகியும், சுமார் 40,000 வேலையற்ற பட்டதாரிகள் இன்னும் வேலைவாய்ப்பின்றி உள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.
விசேட உரையொன்றினூடாக இன்று அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தேர்தல் காலத்தில் கொள்கை அறிக்கையில் வேலைவாய்ப்பு குறித்த உறுதிகள் வழங்கப்பட்ட போதிலும் ஆட்சிக்கு வந்த பின் அவை நிறைவேற்றப்படவில்லை.
பட்டதாரிகளைப் தமது தேவைகளுக்குப் பயன்படுத்தி, தமது வாக்குகளை அதிகரித்து வெற்றி பெற்றாலும், ஆளுந்தரப்பைச் சேர்ந்த சகலரும் பட்டதாரிகள் விடயத்தில் இன்று கரிசனை செலுத்த தவறியுள்ளனர்.
சர்வதேசநாணய நிதியத்துக்கு அஞ்சியே அரசாங்கம் பட்டதாரிகளுக்கு தொழில் வழங்காதிருக்கின்றதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
பட்டதாரிகள் நாட்டின் வளங்கள் என்பதால், அவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த பயிற்சி மற்றும் தொழில் வழங்கி, அவர்களை பொருளாதார வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.





