
இலங்கையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் சஜித் பிரேமதாஸ நீடிப்பது அரசுக்கு நல்லது.” – இவ்வாறு அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-
“பதவிகளுக்கு டிசம்பர் மாதம் என சஜித் கால எல்லை நிர்ணயிப்பார். ஆனால், அது எந்த வருடமாக இருக்கும் எனக் கூறுவதில்லை. எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்குப் பலரும் போட்டியிடுகின்றனர். அதனைத் தக்கவைத்துக்கொள்வதற்காகவே சஜித் போராடுகின்றார். மாறாக அரச தலைவர் பதவிக்கு வருவது அவரின் எண்ணமாக இல்லை.
அரசு பொருளாதாரத்தை வலுப்படுத்தி வருகின்றது. சஜித்தால் என்ன செய்ய முடியும்? அவர் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருப்பது அரசுக்கு நல்லது.” – என்றார்.





