இலங்கை

கிளிநொச்சி வளாக விவகாரங்கள் குறித்து பரிசீலித்த பிரதமர்

கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தின் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாட இன்றைய தினம்(3) பிற்பகல் 12 மணியளவில் பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்கள் கிளிநொச்சி வளாகத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.

 

அதன் பின்னர் பிரதமர் வளாகத்தின் பீடாதிபதிகள் மற்றும் துறைசார் நிறுவனர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களிடம் பல்கலைக்கழகத்தின் தேவைகள் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடியதை தொடர்ந்து அதற்கான தீர்வுகள் பற்றியும் கூறி அதனை உடனடியாக செய்து தருவதாகவும் கூறிச் சென்றார்.

 

இக் கலந்துரையாடலில் யாழ். கிளிநொச்சி தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button