
யாழ்ப்பாணம் செம்மணி – சித்துப்பாத்தி பகுதியில் அமைந்துள்ள இந்து மயானத்தில் உள்ள மனிதப் புதைகுழியில் இதுவரை 130 மனித எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் 120 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் 29வது நாளாக யாழ். நீதவான் ஏ.ஏ. ஆனந்தராஜாவின் மேற்பார்வையில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள், தொல்லியல் பேராசிரியர் ராஜ்சோம தேவா, சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோரின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

முதற்கட்டமாக அடையாளம் காணப்பட்ட இடத்தில் மேலும் மூன்று மனித எலும்புக்கூடுகள் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மேலும், நாளை (திங்கட்கிழமை) நாளயிலுள்ள பிற பகுதிகளில் மனிதப் புதைகுழிகள் உள்ளதா என்பதை உறுதி செய்ய ஸ்கான் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
அத்துடன், நாளை மறுதினம் (செவ்வாய்க்கிழமை) புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட சான்றுப் பொருட்கள் பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.





