சுவிஸ்

சுவிசில் சர்க்கரை நோய்: 3 பேரில் ஒருவருக்கு நோய் இருப்பதே தெரியாது

சுவிசில் கிட்டத்தட்ட 5 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு சர்க்கரை நோய் இருக்கிறது. இவர்களில் 3 பேரில் ஒருவருக்கு, தனக்கு நோய் இருப்பதே தெரியாது.

காரணம், இந்த நோய் ஆரம்பத்தில் எந்த அறிகுறியையும் காட்டாது. நோய் முற்றிய பிறகுதான் உடலில் மாற்றங்கள் தெரியும். டிசீனோ மாநிலத்தின் (Ticino) சர்க்கரை நோயாளர் சங்கமான “டியாபெத் டிசீனோ” (Diabete Ticino) தலைவர் ரஃபாயெல் சியாரினியும், நிபுணர் டாக்டர் எலெனா கமாரா அவர்களும் இதைச் சொன்னார்கள்.

இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே டாக்டரைப் பார்க்க வேண்டும்: காரணமே இல்லாமல் அதிகத் தாகம் எடுப்பது, அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தோன்றுவது (குறிப்பாக இரவில்), எதிர்பாராமல் உடல் எடை குறைவது.

நோயைக் கண்டுபிடிப்பது கடினம் இல்லை. குடும்ப டாக்டரிடம் போய் இரத்தப் பரிசோதனை செய்தால் போதும். நோய் முற்றுவதற்கு முன்பே கண்டுபிடித்துவிட முடியும்.

இன்று சர்க்கரை நோயோடு எல்லா வேலைகளையும் செய்யலாம். விமானி வேலை மட்டும்தான் முடியாது என்று சியாரினி சொல்கிறார். ஊசிகளும் முன்பை விட மிகச் சிறியவை. நோயாளிகள் குடும்பங்களுக்கு சங்கம் உதவுகிறது. பள்ளிகளில் ஆசிரியர்களுக்கும் பயிற்சி கொடுக்கப்படுகிறது. உடற்பயிற்சியும் நல்ல உணவும் முக்கியம் என்றும் அவர்கள் சொல்கிறார்கள்.


மூலம்: RSI
புகைப்படம்: Towfiqu barbhuiya / Unsplash

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button