சுவிசில் தற்போது பதவியில் இருக்கும் மேயர்களில் மிக நீண்ட காலம் பணியாற்றிய அத்திலியோ சவியோனி (Attilio Savioni) விலகுகிறார். கிராவுபுண்டன் மாநிலத்தில் (Graubünden) உள்ள காஸ்தனேடா (Castaneda) கிராமத்தின் மேயராக அவர் 46 ஆண்டுகள் இருந்தார்.
சவியோனிக்கு இப்போது 81 வயது. தற்போதைய பதவிக் காலம் முடிந்ததும் மீண்டும் போட்டியிட மாட்டார். காஸ்தனேடா, காலாங்கா பள்ளத்தாக்கில் (Calanca) உள்ள ஒரு சிறிய கிராமம். அங்கே சில நூறு பேர்தான் வசிக்கிறார்கள்.
அவர் தன் 25 வயதில் அரசியலுக்கு வந்தார். சொந்த ஊரான சாந்தா மரியா இன் காலாங்கா (Santa Maria in Calanca) கிராம நிர்வாகத்தில் முதலில் பணியாற்றினார். பிறகு காஸ்தனேடாவுக்குக் குடிபெயர்ந்தார். அங்கே கிராம சபையில் உறுப்பினரானார். இரண்டு ஆண்டுகள் கழித்து மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இத்தனை ஆண்டுகளில் பள்ளத்தாக்கின் பல திட்டங்களுக்கு அவர் துணையாக இருந்தார். காஸ்தனேடாவில் பள்ளத்தாக்குப் பள்ளி உருவானதும் அவற்றில் ஒன்று.
புதிய மேயரை மக்களே தேர்ந்தெடுப்பார்கள். வாக்கெடுப்பு நவம்பர் 29 அன்று நடக்கும். தாவிதே சில்வாந்தி (Davide Silvanti), என்னியோ கத்தனேயோ (Ennio Cattaneo) ஆகிய இருவர் போட்டியில் உள்ளனர். வெற்றி பெறுபவர் அடுத்த பதவிக் காலத்தில் கிராமத்தை வழிநடத்துவார்.
மூலம்: Le Matin
புகைப்படம்: Patrick Robert Doyle / Unsplash





