சுவிசின் Estivale Open Air இசை விழா, அடுத்த ஆண்டுக்கான முதல் ஐந்து கலைஞர்களை அறிவித்துள்ளது. 35வது விழா 2027 ஜூலை 28 முதல் 31 வரை எஸ்டாவாயே-லே-லாக் (Estavayer-le-Lac) நகரில் நடக்கும்.
முதல் நாளான ஜூலை 28 அன்று கெட்டான் ருசெல் (Gaëtan Roussel) தனியாகப் பாடுவார். இவர் Louise Attaque என்ற பிரெஞ்சு இசைக்குழுவின் பாடகர். ஜூலை 29 அன்று அடேல் காஸ்டியோன் (Adèle Castillon) மேடை ஏறுவார். அவருடன் பிரெத்தான் பகுதியைச் சேர்ந்த பெர்செவால் (Perceval) இருப்பார். இவர் டெக்னோ இசையுடன் மத்தியகால இசையையும் கலப்பவர்.
ஜூலை 30 அன்று Superbus குழு வருகிறது. “Lola”, “Butterfly” பாடல்கள் மூலம் இந்தக் குழு பிரபலமானது. கடைசி நாளான ஜூலை 31 அன்று பிரெஞ்சு மொழி ராப் இசையின் பெரிய பெயரான நீஞோ (Ninho) பாடுவார்.
இன்னும் சில கலைஞர்களின் பெயர்கள் பின்னர் அறிவிக்கப்படும். டிக்கெட் விற்பனை நவம்பர் 17 முதல் தொடங்குகிறது. குறைந்த எண்ணிக்கையிலான டிக்கெட்டுகளுக்கும் சீசன் பாஸ்களுக்கும் முதலில் விலை குறைவாக இருக்கும் என்று ஏற்பாட்டாளர்கள் சொல்கிறார்கள்.
மூலம்: Le Matin
புகைப்படம்: Ashley Owen / Unsplash





