சுவிஸ் குடும்பங்களின் வருமானம் 2024-இல் கிட்டத்தட்ட மாறவில்லை, ஆனால் செலவுகள் தொடர்ந்து ஏறியுள்ளன. குறிப்பாக வீட்டுக்கான செலவு கூடியுள்ளது என்று சுவிஸ் புள்ளிவிவர அலுவலகம் (OFS) செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
வரி, மருத்துவக் காப்பீடு போன்ற கட்டாயச் செலவுகளைக் கட்டிய பிறகு, ஒரு குடும்பத்தின் கையில் மாதம் சராசரியாக கிட்டத்தட்ட 7,200 பிராங்க் மிஞ்சியது. இது 2023-ஐ விட மிகச் சிறிய உயர்வுதான். இது சராசரியாக 2 பேர் உள்ள குடும்பத்தின் கணக்கு.
ஆனால் எல்லோருக்கும் இவ்வளவு கிடைப்பதில்லை. 10 குடும்பங்களில் 6 குடும்பங்களுக்கு இதைவிடக் குறைவாகவே மிஞ்சுகிறது.
வீட்டு வாடகை, மின்சாரம், சூடாக்கும் செலவு எல்லாம் சேர்ந்து கடந்த ஆண்டை விட மாதம் கிட்டத்தட்ட 100 பிராங்க் அதிகமானது. எல்லாச் செலவும் போக, குடும்பங்கள் சராசரியாக ஓரளவு பணம் சேமிக்க முடிந்தது.
மிகக் குறைந்த வருமானம் உள்ள குடும்பங்களின் நிலை வேறு. அவர்கள் சம்பாதித்ததை விட அதிகமாகவே செலவழித்தனர். இவர்களில் ஓய்வு பெற்றவர்கள் அதிகம். அவர்கள் தங்கள் சேமிப்பிலிருந்து எடுத்து செலவைச் சமாளிக்கிறார்கள்.
மூலம்: Le Matin
புகைப்படம்: Yura Lytkin / Unsplash





