சுவிஸ்

ஜெனீவா – லோசான் ரயில் பாதையில் சேதம்: ரயில்கள் தாமதம், சில ரத்து

ஜெனீவா (Genève) – லோசான் (Lausanne) ரயில் பாதையில் இன்று போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நியோன் (Nyon) – ரோல் (Rolle) இடையே தண்டவாளத்தில் சேதம் ஏற்பட்டதே காரணம்.

சுவிஸ் ரயில்வே நிறுவனம் (CFF) இதை அறிவித்துள்ளது. பல ட்ரெயின்கள் தாமதமாக ஓடும். சில ட்ரெயின்கள் முழுமையாக ரத்தாகும்.

இந்தக் கட்டுப்பாடுகள் குறைந்தது மதியம் 2 மணி வரை நீடிக்கும். அதற்குப் பிறகும் தொடருமா என்பது இன்னும் தெரியவில்லை.

EC, IC1, IR15, IR90, IR95, RE33 ஆகிய ட்ரெயின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. சேதம் எப்படி ஏற்பட்டது என்ற விவரத்தை CFF இன்னும் சொல்லவில்லை.


மூலம்: Le Matin
புகைப்படம்: Alessandro Prato / Unsplash

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button