திங்கள்கிழமை, நவம்பர் 16 முதல் Swiss விமானத்தில் ஆன்லைன் செக்-இன் செய்ய “Travel ID” கணக்கு கட்டாயம். சூரிச் (Zurich) விமான நிலையத்திலிருந்து புறப்படுபவர்களுக்கும் அன்றிலிருந்து இந்த விதி வருகிறது.
Swiss, Edelweiss மற்றும் Lufthansa குழுமத்தின் மற்ற விமான நிறுவனங்களுக்கும் இது பொருந்தும். இந்த நிறுவனங்களின் ஆன்லைன் சேவைகளை எல்லாம் ஒரே அடையாளத்தின் கீழ் கொண்டுவருவதே நோக்கம்.
வழக்கம்போல் புறப்படுவதற்கு முன் இமெயில் வரும். ஆனால் இனி பெயரைப் போட்ட பிறகு, Travel ID மூலம் உள்நுழைய வேண்டும். கணக்கு இல்லையா? Swiss அல்லது Lufthansa இணையதளத்தில் இமெயில் முகவரி கொடுத்து உருவாக்கலாம். Miles & More கணக்கு இருப்பவர்கள் அதை Travel ID உடன் இணைத்துக்கொள்ளலாம்.
புதிய கணக்கு வேண்டாம் என்றால், விமான நிலையத்தில் நிறுவனத்தின் கவுண்டரிலோ தானியங்கி இயந்திரத்திலோ செக்-இன் செய்யலாம்.
சுவிஸில் ஜெனீவா (Genève) போன்ற மற்ற விமான நிலையங்களில் இந்த விதி நவம்பர் 2 முதல் அமலில் உள்ளது. சூரிச்சுடன் சேர்ந்து மியூனிக், அமெரிக்கா, கனடா, மெக்சிகோவிலிருந்து புறப்படும் விமானங்களுக்கும் திங்கள் முதல் தொடங்குகிறது. நவம்பர் 30 அன்று ஃப்ராங்க்ஃபுர்ட் உட்பட எல்லா இடங்களிலும் முழுமையாக வரும்.
மூலம்: Le Matin
புகைப்படம்: Briana Tozour / Unsplash





