சுவிஸ் முழுவதும் திங்கள்கிழமை முதல் பலத்த காற்று வீசத் தொடங்குகிறது. செவ்வாய்க்கிழமை நிலைமை இன்னும் மோசமாகும் என்று சுவிஸ் வானிலை மையம் (MétéoSuisse) சொல்கிறது.
இந்த வார இறுதி அமைதியாக இருந்தது. ஆனால் திங்கள் முதல் காற்று வேகமெடுக்கும். சமவெளிப் பகுதிகளில் மிதமான காற்று இருக்கும். மலைப் பகுதிகளில் காற்று மிகவும் பலமாக வீசும். வானம் மேகமூட்டமாக இருக்கும். இடையிடையே மழையும் பெய்யும்.
செவ்வாய்க்கிழமை காற்று இன்னும் பலமாகும். குறிப்பாக சுவிஸின் வடக்குச் சமவெளிப் பகுதியிலும் ஜூரா மாநிலத்தின் அய்வா (Ajoie) பகுதியிலும் பலமாக வீசும். மலைகளில் புயல் போல வீசும். ஜெர்மன் மொழி பேசும் பகுதிகளிலும் இதே நிலைதான்.
மேற்கு ஆல்ப்ஸ் மலைகளில் தொடர்ந்து கனமழை பெய்யலாம். 2600 மீட்டருக்கு மேல் 30 முதல் 50 சென்டிமீட்டர் புதிய பனி விழும். சமவெளியில் வெப்பம் 14 டிகிரி வரை போகலாம்.
புதன், வியாழன் இரண்டு நாட்களும் நாடு முழுவதும் காற்றும் மழையும் தொடரும். ஜெர்மன் மொழிப் பகுதிகளின் மலைகளில் காற்று இன்னும் புயல் போலவே இருக்கும். வானிலை சீராக இன்னும் சில நாட்கள் ஆகும்.
மூலம்: Le Matin
புகைப்படம்: Alain Rieder / Unsplash





