பிரிபூர் மாநிலத்தில் (Fribourg) காணாமல் போயிருந்த 70 வயது பெண் ஞாயிற்றுக்கிழமை மாலை கண்டுபிடிக்கப்பட்டார். அவர் வுன்னெவில் (Wünnewil) ஊரில் இருந்தார்.
அந்தப் பெண் ஜூஸ் (Jeuss) ஊரில் உள்ள தன் வீட்டில் இருந்தார். நவம்பர் 15, ஞாயிறு அதிகாலை 12:45 மணிக்கு அவரை கடைசியாகப் பார்த்தார்கள். காலை 7:30 மணிக்கு பொலிசுக்குத் தகவல் போனது. குடும்பத்தினருக்கு அவரைப் பற்றி எந்தத் தகவலும் தெரியவில்லை.
பிரிபூர் மாநில பொலிஸ் (Police cantonale) பொதுமக்களிடம் உதவி கேட்டது. அந்தப் பெண்ணை யாராவது பார்த்திருந்தால் தகவல் சொல்லுங்கள் என்று அறிவித்தது.
மாலை 5:15 மணி அளவில் ஒருவர் அவரைக் கண்டார். அந்தப் பெண் மிகவும் களைப்பாக இருந்தார். ஆனால் அவரது உடல்நிலை நன்றாக இருக்கிறது. இதனால் தேடுதல் முடிவுக்கு வந்தது.
மூலம்: Le Matin
புகைப்படம்: Age Cymru / Unsplash





