சுவிஸ்

பழைய மெத்தைகளும் இனி மறுசுழற்சி: சுவிஸ் முழுவதும் புதிய திட்டம்

சுவிஸில் ஆண்டுக்கு சுமார் ஒரு மில்லியன் பழைய மெத்தைகள் குப்பையாகின்றன. அவற்றை எரிக்காமல் மறுசுழற்சி செய்யும் திட்டம் ஆர்கோ மாநிலத்தில் (Aargau) தொடங்கியது. இப்போது நாடு முழுவதிலிருந்தும் மெத்தைகளை அனுப்பலாம்.

“மெத்தை கூட்டமைப்பு” (Matratzen Allianz) என்ற அமைப்பு ஒரு வருடம் முன்பு இந்தத் திட்டத்தைத் தொடங்கியது. எதிர்பார்த்ததை விட நன்றாக நடக்கிறது. பழைய மெத்தையில் உள்ள பெரும்பாலான பொருட்களை மீண்டும் பயன்படுத்த முடிகிறது. இப்போது மறுசுழற்சி ஆகும் அளவு குறைவுதான். அதைப் பல மடங்கு கூட்ட அவர்கள் திட்டமிடுகிறார்கள்.

பிரச்சனை பணம். மெத்தையை எரிப்பதை விட மறுசுழற்சி செய்யவே செலவு அதிகம். ஒரு மெத்தைக்கு சராசரியாக 20 பிராங்க் ஆகிறது. இதுவரை ஆர்கோ மாநிலம்தான் பணம் கொடுத்தது. இப்போது myclimate Schweiz என்ற அறக்கட்டளையும் சேர்ந்திருக்கிறது.

இப்போது ஆர்கோவில் மூன்று சேகரிப்பு நிலையங்கள் உள்ளன. அங்கிருந்து மெத்தைகள் பெர்ன் மாநிலத்தில் உள்ள விட்ஸ்வில் (Witzwil) சிறைக்குப் போகின்றன. நாடு கடத்தப்படவிருக்கும் கைதிகள் பொருட்களைக் கையால் பிரித்து அடுக்குகிறார்கள். நுரைப் பகுதியை தலையணைக்குள் நிரப்பப் பயன்படுத்தலாம்.

புதிய மாற்றம் இது: சுவிஸ் முழுவதிலிருந்தும் பழைய மெத்தைகளை ஆர்பெர்க்கில் (Aarberg) உள்ள Sortec நிறுவனத்திடம் கொண்டு கொடுக்கலாம். மறுசுழற்சியை செய்வது இந்த நிறுவனம்தான். அடுத்து பல இடங்களில் சேகரிப்பு நிலையங்கள் திறக்கப்படும். ஹோட்டல்கள், மெத்தை தயாரிப்பாளர்களுடனும் சேர்ந்து வேலை செய்ய கூட்டமைப்பு விரும்புகிறது.


மூலம்: SRF
புகைப்படம்: Compagnons / Unsplash

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button