சுவிஸின் வாலே மாநிலத்தில் (Valais) உள்ள வெர்பியே (Verbier) பகுதியில் நடந்த பாராகிளைடிங் விபத்தில் 32 வயது பிரெஞ்சுக்காரர் உயிரிழந்தார். ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8 அன்று இது நடந்தது.
மாநிலப் பொலிஸ் தகவலின்படி, அவர் காலை சுமார் 11.30 மணிக்கு ருயினெட் (Ruinettes) பகுதியிலிருந்து பறக்கத் தொடங்கினார். மலை லிஃப்ட் வந்து சேரும் இடம் அது. பறந்துகொண்டிருக்கும்போதே பாராகிளைடரின் இறக்கை மீதான கட்டுப்பாட்டை அவர் இழந்தார். அது ஏன் நடந்தது என்று இன்னும் தெரியவில்லை.
அவர் அருகிலிருந்த காட்டுப் பகுதியில் விழுந்தார். அதைப் பார்த்த ஒருவர் உடனே அவசர உதவிக்குத் தகவல் கொடுத்தார். வாலே மாநில அவசர உதவி அமைப்பு (OCVS 144) ஏர்-கிளேசியர்ஸ் (Air-Glaciers) ஹெலிகாப்டரை அனுப்பியது.
மீட்புப் படையினர் முதலுதவி செய்தனர். ஆனால் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டார் என்பதை மட்டுமே அவர்களால் உறுதிசெய்ய முடிந்தது. விபத்து எப்படி நடந்தது என்பதைக் கண்டறிய விசாரணை தொடங்கியுள்ளது.
மூலம்: Le Matin
புகைப்படம்: Jenny DeLuca / Unsplash





