சுவிஸ்

ஸெர்மாட்டில் ஆடம்பர சலே வீட்டை வாடகைக்கு விடாத உரிமையாளருக்கு 90,000 பிராங்க் தண்டனை

வலே மாநிலத்தில் (Valais) உள்ள ஸெர்மாட் (Zermatt) நகரில், ஆடம்பர சலே வீட்டின் உரிமையாளருக்கு 90,000 பிராங்க் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வீட்டை வாடகைக்கு விட வேண்டிய விதியை அவர் மீறியதே காரணம்.

மேல் வலே பகுதியின் அரசு வழக்கறிஞர் அலுவலகம் (Ministère public) இந்தத் தீர்ப்பை வழங்கியது. உரிமையாளர் ஒரு சுவிஸ் நாட்டவர். தீர்ப்பு இப்போது இறுதியாகிவிட்டது.

அவர் 2016-ல் ஒரு நிறுவனம் மூலம் “7 Heavens” வீட்டுத் தொகுதியில் இந்த சலேயை வாங்கினார். நில பதிவேட்டில் அது வணிகத்துக்கான வீடு என்று பதிவாகியிருந்தது. அதனால் விடுமுறைக்கு வருபவர்களுக்கு அடிக்கடி வாடகைக்கு விட வேண்டும். தன் சொந்த விடுமுறை வீடாக மட்டும் வைத்திருக்கக் கூடாது.

ஆனால் 2017 முதல் அதிகாரிகள் தலையிடும் வரை, வருடத்துக்கு அதிகபட்சம் 2-3 வாரம்தான் வாடகைக்கு விடப்பட்டதாகத் தெரிகிறது. சில வருடங்களில் வெளியாட்கள் யாரும் அங்கே தங்கவே இல்லை. ஸெர்மாட் நகராட்சிதான் இந்த விஷயத்தை அதிகாரிகளுக்குத் தெரிவித்தது.

90,000 பிராங்க் தண்டனை நிபந்தனையுடன் கூடியது. அவர் மீண்டும் குற்றம் செய்யாவிட்டால் இந்தத் தொகையைக் கட்ட வேண்டியதில்லை. ஆனால் 10,000 பிராங்க் அபராதத்தை உடனே கட்ட வேண்டும்.


மூலம்: Le Matin
புகைப்படம்: Baptx / Unsplash

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button