சுவிஸ் விஞ்ஞானி தாமஸ் சூர்புக்கன் (Thomas Zurbuchen) “Prix Suisse 2026” விருதைப் பெற்றுள்ளார். பொருளாதாரம், அறிவியல், விளையாட்டு, கலை போன்ற துறைகளில் சிறந்து விளங்கும் ஒருவருக்கு ஒவ்வொரு ஆண்டும் இந்த விருது வழங்கப்படுகிறது.
சூர்புக்கன் 2016 முதல் 2022 வரை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவில் (Nasa) அறிவியல் பிரிவின் இயக்குநராக இருந்தார்.
2023-இல் அவர் சூரிச்சில் (Zurich) உள்ள ETH தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் விண்வெளி அறிவியல் பேராசிரியரானார். அங்கே “ETH Zurich Space” பிரிவையும் வழிநடத்தினார். இப்போது அவர் அமெரிக்க விண்வெளி நிறுவனமான Blue Origin-இல் சேரப் போகிறார்.
அவரது அறிவியல் சாதனைகளுக்காக மட்டுமல்ல, சுவிஸ்ஸின் புதிய தலைமுறை ஆராய்ச்சியாளர்களுக்கு முன்மாதிரியாக இருப்பதற்காகவும் இந்த விருது கிடைத்துள்ளதாக ETH பல்கலைக்கழகம் கூறியுள்ளது.
மூலம்: SRF
புகைப்படம்: NASA / Unsplash





